Monday 6th of May 2024 01:01:18 PM GMT

LANGUAGE - TAMIL
-
மூன்று வாரத்தில் யாழ்.மாவட்டத்தில் வர்த்தகர்கள் 53 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மூன்று வாரத்தில் யாழ்.மாவட்டத்தில் வர்த்தகர்கள் 53 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!


யாழ் மாவட்டத்தில் அதிக விலைக்கு பொருள் விற்றல் காலாவதியான பொருள் விற்றல் போன்ற குற்றச்சாட்டுகளில் கடந்த மூன்று வாரங்களாக 53 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

நேற்று முன் தினத்தில் மட்டும் 8 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இருந்தபோதிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக நீதிமன்ற நடைமுறையில் சற்று தாமதம் காணப்படுகின்றது.

இருந்தபோதிலும் தொடர்ச்சியாக பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையினரால் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

அதனுடன் இணைந்த வகையிலே நிறுத்தல் மற்றும் அளவைகள் திணைக்களமும் தங்களுடைய பணியாளர்களை களப் பணியில் ஈடுபடுத்தி பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் நடைபாதை வியாபார நிலையங்களும் நடமாடும் விற்பனை வண்டிகளும் பரிசோதனை செய்யவுள்ளனர் எனவே வியாபாரிகள் மிகவும் விழிப்புணர்வுடன் பொதுமக்களுக்கு சகாய விலையில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் அதிக விலைக்கு விற்பனை செய்து பிடிபட்டால் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது .

அத்தோடு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையுடன் இணைந்த வகையில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் 5 பட்டதாரி பயிலுனர்களுடன் இணைந்து இப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு நாளாந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.

குறிப்பாக சீனி அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான விற்பனை நிலை தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது நேற்றைய தினத்தில் இருந்து மிகவும் இறுக்கமான முறையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE